ஆன்லைன் கேம் விளையாட கூடாது என கண்டித்த பெற்றோர்.. 3 பேரை கொலை செய்த வாலிபர்..!
ஆன்லைனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த வாலிபரை அவரது பெற்றோர் கண்டித்த நிலையில், அந்த இளைஞர் ஆத்திரத்தில் தனது பெற்றோர், சகோதரி என மூவரை கொலை செய்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் சூரியகாந்த் என்ற 21 வயது கல்லூரி மாணவன் எந்நேரமும் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி இருப்பதை பார்த்து, அவரது பெற்றோரும் சகோதரியும் கண்டித்துள்ளனர். ஆனால், சூரியகாந்த் அதை நிறுத்துவதாக தெரியவில்லை.
இந்த நிலையில், நேற்று இரவு நீண்ட நேரம் ஆன்லைனில் கேமில் மூழ்கியிருந்த சூரியகாந்த்தை பெற்றோர் கண்டித்தனர். இதனால் எரிச்சல் அடைந்த அவர், அருகிலிருந்த கடுமையான பொருளை எடுத்து, தனது தாய், தந்தை மற்றும் சகோதரியை தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் சூரியகாந்த்தின் தந்தை, தாய் , சகோதரி என மூவரும் உயிரிழந்தனர். சம்பவத்திற்குப் பின்னர், சூரியகாந்த் தப்பி ஓடிவிட்டதாகவும், பின்னர் கைது செய்யப்பட்ட போது தனது பெற்றோரையும் சகோதரியையும் கொன்றதை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran