கிராமத்தில் இருந்து தலைநகர் செல்ல ரூ.5 மட்டுமே பேருந்து கட்டணம்.. முதல்வரின் அதிரடி அறிவிப்பு..!
கிராமங்களை நகரத்தோடு போக்குவரத்தில் இணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிராமங்களில் இருந்து தலைநகர் செல்லும் பெண்கள், மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணம் என ஒடிசா மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் மாநிலத்தில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ஆறு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து தலைநகருக்கு செல்லும் பேருந்தில் ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்தி பெண்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்கள் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரங்களை கிராமத்தோடு இணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாநில அரசு இதற்காக 3000 கோடிக்கு மேல் செலவு செய்து உள்ளது என்பதும் முதல் கட்டமாக 1131 கிராமத்து பஞ்சாயத்துகளில் வசிக்கும் 63 லட்சம் மக்கள் இதனால் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில் கிராமத்தில் இருந்து தலைநகருக்கு செல்வதற்காக அதிநவீன பேருந்துகள் தயார் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva