கடைசியில் சம்பளத்திலும் கைவைத்துவிட்டது ஆதார் அட்டை
ஆதார் அட்டையை எந்த ஒரு விஷயத்திற்கு கட்டாயமாக்க கூடாது என்று ஒருபுறம் சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டுக்கொண்டு வந்தாலும் அதைப்பற்றி எந்த கவலையும் இன்றி ஆதார் அட்டையை பல விஷயங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கட்டாயம் என்று அறிவித்து வருகின்றன.
கேஸ் கனெக்சன் முதல் ரேசன் கார்டு வரை ஆதார் அட்டை இல்லாமல் எதுவுமே இனி கிடைக்காது. ஏன், இனிமேல் திருப்பதி கோவிலுக்கு சென்றாலும் ஆதார் அட்டை இல்லையெனில் லட்டு கிடையாது.
இந்த நிலையில் பல்வேறு சலுகைகளில் நுழைந்த ஆதார் தற்போது சம்பள விஷயத்திலும் நுழைந்துவிட்டது. சமீபத்தில் உத்தரபிரதேச அரசு வெளியிட்ட ஒரு உத்தரவில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆதார் அட்டை எண் சமர்ப்பிக்க வேண்டும், அப்போது தான் அடுத்த மாத சம்பளம் கிடைக்கும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.