புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 6 ஜூலை 2017 (18:07 IST)

பெட்ரோல் பங்கில் மோசடியை தடுக்க புதிய திட்டம்....

பெட்ரோல் பங்குகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசலில் மோசடி நடப்பதை தடுப்பதற்கு அரசு சில திட்டங்களை தீட்டி வருகிறது.


 

 
பொதுவாக பெட்ரோல் பங்குகளில் அளிக்கப்படும் பெட்ரோலில் மோசடி நடப்பதாக நாடெங்கும் புகார் எழுந்து வருகிறது. பெட்ரோல் பங்குகளில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர், மக்களுக்கு குறைவாக பெட்ரோலை கொடுத்து லாபம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
 
அதிலும், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், பெட்ரோல் பைப்பில், ஒரு சிப் பொருத்தப்பட்டு, அதை ரிமோட் கருவி மூலம் இயக்கி பெட்ரோல் மற்றும் டீசலின் அளவை குறைத்து பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபடுகின்றனர் என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் படி லிட்டருக்கு 50 மி.லி குறையும்.
 
இதுபற்றி பெட்ரோல் அமைச்சகம், பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் மத்திய நுகர்வோர் விவகார அமைச்சக அதிகாரிகள் ஒன்று கூடி ஆலோசனை செய்தனர். அதில், எலக்ட்ரானிக் முறையில் பெட்ரோல் பம்புகளில் பாஸ்வேர்டு மூலம் இ-சீலீங் வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
 
இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் எனத்தெரிகிறது.