வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 மே 2022 (13:52 IST)

22 பேருடன் புறப்பட்ட விமானம் மாயம்! – நேபாளத்தில் பரபரப்பு!

Tara Air
நேபாளத்தில் இருந்து இந்தியர்கள் உட்பட 22 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் உள்ள பொக்காராவில் இருந்து ஜோம்சோமுவிற்கு தாரா ஏர் என்ற நிறுவனத்தின் சிறிய ரக விமானம் இன்று காலை 9.55 மணியளவில் புறப்பட்டது. இந்த விமானத்தில் 2 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உட்பட 22 பேர் பயணித்துள்ளனர்.

விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் விமானத்துடன் கட்டுப்பாட்டு அறையின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விமானம் தற்போது மாயமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தகவல் தொடர்பை இழந்த இடத்தில் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.