வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (00:58 IST)

அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிக்கும் நீட் தேர்வா?

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்ற குழப்பம் ஒருவழியாக நேற்று தீர்ந்துவிட்டது. தமிழகத்திற்கு நீட் தேர்விற்கான விலக்கு இல்லை என்றும் நீட் தேர்வின் அடிப்பையில்தான் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உறுதியாக கூறிவிட்டது

 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளுக்கும் நாடு முழுவதற்குமான ஒரே தேர்வு நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு நாடு முழுவதற்கும் சேர்த்து ஒரே மாதிரியான தேர்வு ஒன்றை நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் முடிவு செய்து, வருகின்ற கல்வி ஆண்டில் இருந்தே அது நடைமுறைக்கு வரும் என சமீபத்தில் அறிவித்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
 
இருப்பினும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு கிடைக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பை பார்த்துவிட்டு அடுத்த ஆண்டு நடத்தலாமா? அல்லது அதற்கும் அடுத்த ஆண்டு நடத்தலாமா? என்பது குறித்து மனித வளத்துறை முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. நம் அரசியல்வாதிகள் கண்டிப்பாக மத்திய அரசிடம் போராடி விலக்கு பெற்று தரமாட்டார்கள். எனவே இந்த ஆண்டு பிளஸ் படிப்பவர்கள் அடுத்த ஆண்டு பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்றால் நீட் தேர்வுக்கு தயாராகுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.