மீண்டும் ஒரு ரயில் விபத்து. மும்பை அருகே துரந்தோ எக்ஸ்பிரஸ் விபத்து
கடந்த ஒருசில நாட்களில் மூன்று பெரிய ரயில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதால் ரயிலில் பயணம் செய்ய பயணிகள் அச்சப்பட்டு வரும் நிலையில் சற்று முன்னர் நாக்பூரில் இருந்து மும்பை செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை அருகே உள்ள Asangaon என்ற பகுதியில் விபத்துக்குள்ளானது.
துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள டிட்வாலா என்ற பகுதி அருகே இன்று காலை 6.30 மணிக்கு சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அதன் பெட்டிகள் தடம் புரண்டது. இதில் 4 ஏசி பெட்டிகள் மற்றும் என்ஜின் ஆகியவை அடங்கும். இந்த விபத்தால் யாரும் உயிர் இழந்ததாக இதுவரை தகவல் இல்லை.
இருப்பினும் விபத்து நடந்த பகுதியை நோக்கி மீட்புப்படையினர் விரைந்துள்ளனர். கடந்த பத்து நாட்களில் இது நான்காவது ரயில் விபத்து என்பதால் ரயில்வே துறையினர் இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது