1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (08:09 IST)

கொரோனாவால் இந்தியாவில் எத்தனை லட்சம் பேர் வேலையிழப்பு? அதிர்ச்சி புள்ளிவிபரங்கள்

கொரோனாவால் இந்தியாவில் எத்தனை லட்சம் பேர் வேலையிழப்பு?
கொரோனாவால் இந்தியாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர் என்று ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மாதங்களுக்கும் மேல் தொடரும் இந்த லாக்டவுன் காரணமாக இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை.
 
இந்த நிலையில் இந்த கொரோனா காலத்தில் மட்டும் இந்தியாவில் 41 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்திருப்பதாக ஐநாவின் சர்வதேச தொழிலாளர் நிறுவனமும் ஆசிய வளர்ச்சி வங்கியும். கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கட்டுமான தொழில், வேளாண் தொழிலில் உள்ள இளைஞர்கள் தான் பெருமளவில் வேலைவாய்ப்புகளை இழந்திருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்தால் மேலும் 61 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழக்கவும் நேரிடும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது