1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (15:40 IST)

40,000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா முன்னிலை

கடந்த மே மாதம் நடந்த மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார் என்பதும் அவரது கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றது. 
 
இதனை அடுத்து சமீபத்தில் நடைபெற்ற பவானிபுர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவால் என்பவர் போட்டியிட்டார். 
 
இன்றைய இடைத் தேர்தல் முடிவைப் பொறுத்து தான் மம்தாவின் அரசியல் எதிர்காலம் உள்ளது என்பதும் இன்று அவர் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வராக நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத் தேர்தலில் வெவ்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள், 3 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. 
 
மம்தா பானர்ஜி - திரிணமூல் - 63,314
 
பிரியங்கா திப்ரேவால் - பாஜக - 20,576
 
ஸ்ரீஜீவ் பிஸ்வாஸ்- மார்க்சிஸ்ட் - 2529