1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 மார்ச் 2025 (11:14 IST)

ஹலால் போலவே இந்துக்கள் நடத்தும் இறைச்சி கடைகளுக்கு சான்றிதழ்.. மகாராஷ்டிரா அரசு..!

Mutton
இஸ்லாமியர்கள் நடத்தும் இறைச்சிக் கடைகளுக்கு "ஹலால்" என்ற சான்றிதழ் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்துக்கள் நடத்தும் இறைச்சிக் கடைகளுக்கும் "மல்கார்" என்ற புதிய சான்றிதழ் வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
 
இஸ்லாமிய சட்ட முறைப்படி ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதற்குப் பதிலாக, "மல்கார்" என்ற புதிய சான்றிதழ் வழங்கும் முறையை மகாராஷ்டிரா அரசு அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்த சான்றிதழ் இந்துக்கள் நடத்தும் இறைச்சிக் கடைகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து மகாராஷ்டிரா அரசு கூறுகையில், "மல்கார்" சான்றிதழ் பெற்ற ஆட்டு இறைச்சிக் கடைகள் 100% இந்துக்களால் நடத்தப்படும். அங்கு பணியாற்றுபவர்களும் இந்துக்கள் மட்டுமே இருப்பார்கள்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்து இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்க இந்த சான்றிதழ் வழங்கப்படும் என்றும், "மல்கார்" சான்றிதழ் பெற்ற கடைகளில்தான் இந்துக்கள் இறைச்சி வாங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்துக்களுக்கான தனி சான்றிதழ் வழங்கப்பட்டு, புதிய இறைச்சிக் கடைகள் தொடங்கப்படும் நிலையில், அந்த கடைகளில் பெரும்பாலும் இந்துக்கள் இறைச்சி வாங்குவார்கள் என்பதால், இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran