வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (09:47 IST)

மதுராவில் கிருஷ்ணர் சிலை விவகாரத்தால் பரபரப்பு! – போலீஸார் குவிப்பு!

உத்தர பிரதேசத்தில் மசூதி ஒன்றில் கிருஷ்ணர் சிலையை வைக்க உள்ளதாக இந்து அமைப்புகள் தெரிவித்துள்ள நிலையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் கிருஷ்ணர் பிறந்ததாக இந்து மக்களிடையே நம்பிக்கை உள்ளது. அந்த பகுதியில் தற்போது ஒரு மசூதி உள்ளதாகவும், அந்த மசூதிக்குள் புகுந்து கிருஷ்ணர் சிலையை வைக்கப் போவதாகவும் வலதுசாரி அமைப்புகளான அகில பாரத இந்து மகா சபா, ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி நிர்மன் நியாஸ், ஸ்ரீகிருஷ்ண முக்தி தளம் மற்றும் நாராயணி சேனா ஆகிய நான்கு அமைப்புகளும் அறிவித்துள்ளன.

அவர்களுடைய மனுவை நிராகரித்த மாவட்ட நீதிமன்றம் அமைதியை சீர்குலைக்கும் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது என எச்சரித்துள்ளது. நாளை டிசம்பர் 6ம் தேதியில் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் போன்ற எதுவும் நடந்துவிடக் கூடாது என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுராவில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து பகுதிகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.