1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 28 மே 2020 (07:15 IST)

இந்தியாவில் 11 நகரங்களில் மட்டும் ஊரடங்கு நீட்டிப்பா? தமிழகத்தில் எத்தனை நகரங்கள்?

இந்தியாவில் 11 நகரங்களில் மட்டும் ஊரடங்கு நீட்டிப்பா?
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு இன்னும் மூன்று நாட்களில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு மத்திய அரசிடமிருந்து மே 30ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களான சென்னை உள்பட 11 நகரங்களில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் ஒட்டுமொத்த இந்தியாவில் 70% இந்த 11 நகரங்களில் மட்டுமே இருப்பதாகவும், எனவே இந்த 11 நகரங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், புனே, தானே, ஜெய்ப்பூர், சூரத் மற்றும் இந்தூர் ஆகிய 11 நகரங்கலில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு மே 30ஆம் தேதி அறிவிக்கும் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது