ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2019 (15:43 IST)

வாலிபர் கொலை ! அடையாளம் காட்டிய காதலிக்காகப் போட்ட’ டாட்டூ ’ , ’மை ‘

மும்பையில் உள்ள கட்கோபர் பகுதியில் கடந்த மே மாதத்தில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது முகம் சிதைந்திருந்ததால் அவரை அடையாளம் காண்பதில் போலீஸாருக்குச் சிரமம் ஏற்பட்டது. பின்னர் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் அந்த வாலிபர் கல்லால் அடித்துக் கொலைசெய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள சபியுல்லா குரேஷி, மற்று நியாஸ் சவுத்ரி ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்தனர்.அவர்களிடம் விசாரிக்கையில் போதைக்கு அடிமையான அவர்கள் பணத்துக்காக, தெருவில் வந்த வாலிபரை தாக்கியதை ஒப்புக்கொண்டனர்.
 
 
ஆனால் யாரைக்கொலை செய்தோம் என்று அவர்கள் கூறவில்லை. இந்நிலையில் முகம் சிதைக்கப்பட்ட வாலிபரைக் கண்டுபிடிக்கப்பட்ட போலீஸார் மிகவும் சிரமப்பட்டனர்.
 
பின்னர் வாலிபரின் உடலில் BK என்ற இருஎழுத்துக்களையும், வாலிபரின் கையில் இருந்த ஓட்டுக்கு வைத்த ‘மை’ கொண்டு போலிஸார் தீவிரமாகத் தேடினர்.  கடைசியாக  அப்பகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் தீவிரமாக தேடி அதில் BK எழுத்தினைக்கொண்டவர்களை கண்டுபிடித்தனர்.
 
அதில்  மன்காட் பகுதியைச் சேர்ந்த கிரண் வான்கடே என்பது விசாரணையில் தெரிந்தது. அதன்பின் அவரது முகவரிக்குச் சென்றனர். அங்கு வான்கட்டின் தாய் மட்டுமே இருப்பது தெரிந்தது.  அவரது உடம்பில் Bk என்ற டாட்டுகளைப் பற்றிச் சொன்னதும் அதைக்கேட்டு தாயர் அழுத்துள்ளார். இதையடுத்து போலிஸார் முகம் சிதைந்த நிலையில் இருந்த வாலிபரின் பெயரை ஒரு மாதம் கழித்து அடையாளம் கண்டனர். இந்த அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.