1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2018 (08:55 IST)

பேருந்து கட்டணத்தை உயர்த்த ஸ்டிரைக் நடத்தும் தொழிலதிபர்கள்

பேருந்து கட்டணத்தை உயர்த்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஸ்டிரைக் செய்வதை பார்த்திருக்கின்றோம். ஆனால் கேரளாவில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கோரி 4ஆவது நாளாக தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் ஸ்டிரைக்  செய்து வருகின்றனர்.
 
கேரளாவில் ஓடி வரும் சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்ட கட்டணத்தை ரூ.10ஆக உயர்த்த வேண்டும் என்றும், பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான சலுகை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து தனியார் பேருந்துகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன
 
சமீபத்தில் கேரளாவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை அம்மாநில அரசு உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு வரும் மார்ச் மாதம் 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று கேரள அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் செயல்படும் எதிர்க்கட்சிகள் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் பேருந்து கட்டணத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்று தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் போராடி வருவது பொதுமக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.