1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : புதன், 24 ஆகஸ்ட் 2016 (10:11 IST)

சிந்துவின் வெற்றியில் காறி துப்பினால் என்ன? : இயக்குனரின் கருத்தால் சர்ச்சை

சிந்துவின் வெற்றியை சர்ச்சையாக்கிய இயக்குனர்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து குறித்து, மலையாள இயக்குனர் ஒருவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
நடந்து வரும் ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு, வெள்ளிப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
 
இந்தியாவின் ஹைதராபாத் நகரை சேர்ந்த அவருக்கு பிரதமர் மோடி முதல் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு வீடு, கார், அரசு வேலை மற்றும் கோடிக்கணக்கில் பணமும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
சமீபத்தில் ஹைதராபாத் திரும்பிய அவருக்கு, உற்சாக வரவேற்பும், மரியாதையும் கொடுக்கப்பட்டது.
 
இப்படி இந்தியாவே கொண்டாடும் சிந்துவின் வெற்றியை,  கேரள மாநிலத்தை சேர்ந்த சினிமா இயக்குனர் சனல் குமார் சசிதரன், தனது பேஸ்புக் பக்கத்தில் அருவருக்கும் வகையில் விமர்சனம் செய்துள்ளார்.
 
அதில் “எல்லோரும் சிந்துவின் வெற்றியை கொண்டாடுகிறார்கள். நான் அவரின் சாதனையில் காறி துப்பினால் என்னவாகும்?... இப்படி பெரிதாக கொண்டாட என்ன இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 
இவரின் கருத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


 

 
சனல்குமார் சசிதரன்  ‘ஒளிவு திவாசதே களி’ என்ற திரைப்படத்தை கடந்த வருடம் இயக்கினார். இந்த படம், சிறந்த திரைப்படம் மற்றும் ஒலி அமைப்புக்காக கேரள மாநில அரசின் விருதும் பெற்றது. 
 
சிந்துவின் வெற்றி குறித்து இப்படி சர்ச்சையான கருத்து தெரிவித்த அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.