கடலுக்கடியில் மேடை அமைத்து திருமணம் நடத்திய விநோத ஜோடி! [வீடியோ]
கேரளாவில் இளம்ஜோடி ஒன்று கடலுக்கடியில் மேடை அமைத்து திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நிகில் பவார் என்பவருக்கும், ஸ்லோவேகியா நாட்டை சேர்ந்த ஈனிகா பொக்ரான் என்ற பெண்ணுக்கும் கேராளவின் கோவளத்தில் கடலுக்கடியில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இயற்கை காட்சிகள் சூழ்ந்திருக்கும் இந்த கடல் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் இந்த திருமண வைபோகம் நடைபெற்றுள்ளது. திருமண சடங்குகள் செய்யும் வகையில், கடலுக்கு அடியில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
கடலுக்கடியில் மூழ்கியிருக்க ஏதுவாக ஆக்சிஜன் வாயு நிரம்பிய கொள்களன்களையும், கருவிகளையும் சுமந்து சென்று இருந்தனர். கடலுக்கடியில், திருமணம் செய்துகொள்ள சம்மதமா என மணமகன் கேட்க, சம்மதம் என இருவரும் சைகை மூலம் பேசிக் கொண்டனர். பின்னர், இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.