1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 மே 2020 (15:11 IST)

கர்நாடக, கேரள மாநிலங்களில் பொது போக்குவரத்து துவங்க முடிவு!

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் பொது போக்குவரத்தை துவங்க திட்டம். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 96 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் பொது போக்குவரத்தை துவங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா இது குறித்து கூறியதாவது, 
 
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும். மாவட்டத்திற்குள் ரயில்கள் இயக்கப்படும். கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் பொதுபோக்குவரத்து சேவை. அனைத்து கடைகளும் திறக்கப்படும், ஞாயிற்றுகிழமை மற்றும் பொதுமுடக்கம் கர்நாடகா முழுவதும் கடைப்பிடிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 
இதேபோல போக்குவரத்து குறித்து கேரள போக்குவரத்து அமைச்சர் சசீந்திரன் தெரிவித்துள்ளதாவது, கேரளாவில் பொதுப் போக்குவரத்துக்காக பேருந்துகளை இயக்க முடிவு. கொரோனா அதிகம் இல்லாத பகுதிகளில் மட்டும் பேருந்து சேவை. மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்து சேவை. மாவட்டம், மாநிலத்தை விட்டு பேருந்து செல்ல தடை தொடரும் என தெரிவித்துள்ளார்.