ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு படுதோல்வி உறுதி.. பிரசாந்த் கிஷோர்
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், சட்டமன்றம் பாராளுமன்றம் ஆகிய இரண்டிலும் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வி உறுதி என்று கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பதும் அவரது வெற்றிக்கு அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஒரு முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டது
இந்த நிலையில் நேற்று ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரசாந்த் கிஷோர் இந்த முறை ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி படுதோல்வி அடைவார் என்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றும் அவர் கூறினார்
ஆந்திர மக்கள் ஜெகன்மோகன் ரெட்டி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றும் கடந்த 5 ஆண்டுகளில் அவர் ஆந்திராவை நடத்திய விதமே தோல்விக்கு காரணமாக இருக்கும் என்றும் ஆந்திரா மாநில வளர்ச்சிக்கு அவர் எதுவுமே செய்யவில்லை என்றும் கூறினார்
ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பிரசாந்த் கிஷோர் வேலை செய்த நிலையில் தற்போது அவரே ஜெகன்மோகன் ரெட்டி தோல்வி அடைவார் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Mahendran