ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்; தொடரும் சம்பவங்கள்! – மக்கள் பீதி!
ஜம்மு காஷ்மீரில் அதிகாலையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் துருக்கி நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் உயிர்பலிகள் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நியூசிலாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆங்காங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் கிழக்கு கட்ரா பகுதியில் 97 கி.மீ தொலைவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் இந்த நில அதிர்வு அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வு ரிக்டரில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Edit by Prasanth.K