1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 5 மே 2016 (13:35 IST)

ஐஆர்சிடிசி இணையதளத்தில் தகவல்கள் திருடப்பட்டதா? : பயணிகள் அதிர்ச்சி

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் என்று அழைக்கப்படும்(IRCTC) இனையதளம் முடக்கப்பட்டதாகவும், அதிலிருந்த ஏராளமான பயணிகளின் தகவல்களை மர்ம கும்பல் திருடியுள்ளதாகவும் வெளியான தகவல் பீதியை கிளப்பியுள்ளது.


 

 
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம், ஆன்லைனில் கோடிக் கணக்கான பயணிகள் தினமும் ரயில் டிக்கெட் பதிவு செய்கின்றனர். அதில் அவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண், பேன் நம்பர் என அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன.
 
இந்நிலையில், அந்த இணையதளத்தை சிலர் முடக்கி, ஏராளமான தகவல்களை திருடி, அவற்றை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுத்துவிட்டதாக ஒரு ஆங்கில செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பு இதுபற்றி மகாராஷ்டிரா மாநில அரசிடம் புகார் கொடுத்திருப்பதாகவும், இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த தகவல் அந்த இணைய தளத்தில், டிக்கெட் பதிவு செய்யும் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆனால்,இதுபற்றி கருத்து தெரிவித்த ஐ.ஆர்.சி.டி.சி மக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் தத்தா ‘ இணையளத்தை யாரும் முடக்கவில்லை. இருந்தாலும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று கூறியுள்ளார்.