செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2016 (11:45 IST)

பசியால் வாடும் நாடுகள்: இந்தியாவுக்கு 97வது இடம்

சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஐ.எப்.பி.ஆர்.ஐ சார்பில் உலக அளவில் பசியால் வாடும் நாடுகளை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இந்தியா 97வது இடத்தை பிடித்துள்ளது.


 

 
சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஐ.எப்.பி.ஆர்.ஐ சார்பில் உலக அளவில் பசியால் வாடும் நாடுகளை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது.
 
சுமார் 131 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவில் தற்போது 118 நாடுகளில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா 97வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜிரியா, எத்தியோப்பியா, சியாரா லீயோன் உள்ளிட்ட நாடுகள் வறுமையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பொருளாதாரத்தில் இந்தியாவை விட பின் தங்கிய நாடுகளான இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் குறைந்த அளவே மக்கள் வறுமையில் வாடுவதாக தெரியவந்துள்ளது.