திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 9 மே 2017 (16:14 IST)

நீட் தேர்வில் உள்ளாடை சோதனை சர்ச்சை; 4 ஆசிரியைகள் சஸ்பெண்ட்

தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த 7ஆம் தேதி நடைப்பெற்ற நீட் தேர்வில் பெண்களின் உள்ளாடை கலைத்து சோதனை செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுப்பட்ட 4 ஆசிரியைகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


 

 
நீட் மருத்துவ நுழைவு தேர்வு கடந்த 7ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் நடைப்பெற்றது. தேர்வு எழுதச் சென்ற அனைவரிடமும் கடுமையாக சோதனை நடைப்பெற்றது. கடுமையாக விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. முழு கை சட்டை அணியக்கூடாது. பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது.
 
காதணிகள், துப்பட்டா ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது. தேர்வு எழுதச் சென்ற மாணவ, மாணவிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது இந்த சோதனை முறை. பெண்கள் உள்ளாடை கலைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். இச்சம்பவம் நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரள மாநிலம் கண்ணூரில் இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது. இதற்கு கேரள முதலவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதையைடுத்து இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட ஆசிரியைகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 
 
மேலும் கேரள மனித உரிமைகள் கமிஷன் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. அதோடு உயர்நிலை விசாரணை வேண்டும் என்றும் கோரிகை வைத்துள்ளது.