திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (14:50 IST)

டபுள் மடங்காகும் பிறப்பு விகிதம்: ஊரடங்கால் நடப்பது இதுதானா?

இந்தியாவில் வழக்கத்தைவிட கூடுதலாக 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என ஐக்கிய நாடுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
கொரோனா காரணமாக நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இம்முறை சில தளர்வுகளும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதில், இந்தியாவில் இந்தாண்டு இறுதிக்குள் வழக்கத்தைவிட கூடுதலாக 2 கோடி குழந்தைகள் பிறப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக அதிக பெண்கள் கருதரித்திருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. 
 
இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா, நைஜீரியா ஆகிய நாடுகளிளும் கூடுதலாக பிறப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கூடுதலாக 10 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பிறப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.