நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்.. பதட்டமின்றி போலீசில் சரண்..!
உத்தரப்பிரதேச மாநிலத்தில், நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கொலை செய்து விட்டு, எந்தவித பதட்டமும் இன்றி காவல்துறையில் சரணடைந்த கணவர் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவருக்கு, குஞ்சன் என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் சந்தேக பார்வையுடன் வாழ்ந்து வந்ததாகவும், வேறு தொடர்பு வைத்திருக்கலாம் என்ற மனப்பான்மையுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது மனைவி குஞ்சனுக்காக சந்தீப் நூடுல்ஸ் வாங்கி வந்தார். ஆனால், அதை சாப்பிட முடியாது என்று மனைவி கூறினார். இதனை அடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென, கோபம் கொண்ட சந்தீப் மனைவியை சரமாரியாக தாக்கி கழுத்தை நெறித்தார்.
அப்போது, அவருடைய மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதன் பின்னர், தனது மகன்களை அழைத்து, "மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று கூறிவிட்டு, எந்தவித பதட்டமும் இன்றி காவல்துறையினரிடம் சென்று சரணடைந்தார்.
இதனை அடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva