ஞாயிறு, 16 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 மார்ச் 2025 (15:38 IST)

கார் ஓட்டும்போது மாரடைப்பு! வாகனங்களை அடித்து தூக்கிய கார்! - அதிர்ச்சி வீடியோ!

Accident

மகாராஷ்டிராவில் கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது வாகன ஓட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் அந்த கார் பல வாகனங்களை மோதிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மகாராஷ்டிராவின் கோலாபூர் பகுதியை சேர்ந்தவர் தீரஜ் பாட்டில். இவர் நேற்று அதிகாலை வேலைக்கு செல்வதற்காக தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார். கார் ஓட்டிக் கொண்டிருந்தபோதே தீரஜ்க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பல வாகனங்களை அடித்து தூக்கி சென்று பெரும் விபத்திற்குள்ளானது.

 

மாரடைப்பு ஏற்பட்ட தீரஜ் விபத்திலும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டதால் உண்டான இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K