வெள்ளி, 28 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 17 ஜூலை 2016 (15:58 IST)

பாலியல் தொல்லைக்குள்ளாகும் பெண்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை

பாலியல் தொல்லைக்குள்ளாகும் அரசு பெண் ஊழியர்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


 

 
பாலியல் தொல்லைக்குள்ளான பெண்கள் மிரட்டப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் தடுக்கப்படும். உடல் ரீதியாக துன்புறத்தப்படுவது, ஆபாச படங்களை கொண்டு மிரட்டி துன்புறுத்துவது ஆகியவற்றின் கீழ் பாதிக்கப்படும் பெண்களுக்கு விடுமுறை வழங்கப்படும்.
 
விடுமுறை அவர்களின் விடுப்பு கணக்கில் சேர்க்கப்படாது. விடுமுறை அளிக்கப்படும் 90 நாட்களுக்கும் சம்பளம் வழங்கப்படும். இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால விடுமுறையை 26 வாரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.