வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2024 (11:01 IST)

அரசு ஊழியர் பணி ஓய்வு விழா! கண் முன்னால் பலியான மனைவி! - அதிர்ச்சி வீடியோ!

Rajasthan wife death

ராஜஸ்தானில் அரசு ஊழியர் ஒருவர் பணி ஓய்வு பெறும் விழாவில் அவர் கண் முன்னே அவர் மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள மத்திய கிடங்கு நிறுவனத்தின் மேனேஜராக பணியாற்றி வந்தவர் தேவேந்திர சாண்டல். இவரது மனைவி டீனா கடந்த சில ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். இதனால் தேவேந்திர சாண்டல் தனது பணி ஓய்வுக்கு 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில், மனைவியை கவனித்துக் கொள்வதற்காக கட்டாய ஓய்வை பெற்றுள்ளார்.

 

இதனால் அவரை வாழ்த்தி வழியனுப்பவதற்காக விழா நடந்துள்ளது. அதில் மனைவி டீனாவுடன் மாலை அணிந்து நின்ற தேவேந்திர சாண்டலை உடன் பணிபுரிபவர்கள் போட்டோ வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது டீனா மயக்கம் வருவதுபோல உள்ளதாக கூறியுள்ளார். அவரை இருக்கையில் அமர வைத்த தேவேந்திர சாண்டல் தண்ணீர் கொண்டு வருமாறு பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார்.
 

 

ஆனால் தண்ணீர் கொண்டு வருவதற்குள் டீனா மேசையிலேயே மயங்கி சரிந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனைவியை கவனித்துக் கொள்வதற்காக பணியை துறந்த தேவேந்திர சாண்டலின் கண் முன்னேயே அவரது அன்பு மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K