1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2016 (10:08 IST)

தோழிகள் முன்னிலையில் மாணவிகள் கற்பழிப்பு: பகீர் தகவல்!

தோழிகள் முன்னிலையில் மாணவிகள் கற்பழிப்பு: பகீர் தகவல்!

சமீபத்தில் மகாராஷ்டிராவில் அரசு பள்ளி விடுதி ஒன்றில் 12 மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதில் 3 பேர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அங்கு சக மாணவிகள் முன்னிலையில் அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.


 
 
இந்த சம்பவம் குறித்து ஆசிரியர்கள், ஊழியர்கள் என 11 பேரை அதிரடியாக கைது செய்தனர். இந்த விவகாரத்தை கையிலெடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறார் பெண்கள் கமி‌ஷன் முன்னாள் உறுப்பினர் டாக்டர் ஆசா மிர்ஜி.
 
இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களில் முக்கியமனவன் யாது சிங் என்பவன். இவன் அங்கு துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளான். யாதுசிங்கிடம் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
 
இது குறித்து கூறிய டாக்டர் ஆசா மிர்ஜி, யதுசிங் பவார் குற்ற பின்னணி உள்ளவன். இதைக்கூட விசாரிக்காமல் அவனை பள்ளியில் வேலைக்கு சேர்த்துள்ளனர். அங்கு பணியாற்றிய ஆசிரியர் மற்ற ஊழியர்கள் அனைவரையும் தனக்கு சாதகமாக மாற்றி இருக்கிறான் யாதுசிங்.
 
பொதுவாக அந்த பள்ளி விடுதியில் மாணவிகள் அனைவரும் ஒரே இடத்தில் தான் தூங்குவார்கள். இதனையடுத்து மாணவிகள் தூங்கும் இடத்துக்கு செல்லும் யதுசிங் பவார் மற்ற தோழிகள் முன்னிலையிலேயே மாணவிகளை கற்பழித்து இருக்கிறான் என்ற அதிர்ச்சி தகவலை கூறினார்.
 
மேலும், இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் கூறினால் இதையெல்லாம் கண்டுகொள்ளாதீர்கள் மேலும் இது பற்றி யாரிடமும் கூறாதீர்கள் என அறிவுத்தியுள்ளார் என்ற பகீர் தகவலையும் கூறியுள்ளார் அவர்.