ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (09:35 IST)

தெலுங்கானா, சத்தீஷ்கரில் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ்.. மபி, ராஜஸ்தானில் பாஜக ஆட்சி..!

Telangana-Vidhansabha-Chunav-Result-E
சமீபத்தில் ஐந்து மாநில தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் மிசோரம் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நான்கு மாநிலங்களில் இரண்டு மாநிலங்களில் கிட்டத்தட்ட காங்கிரஸ் ஆட்சியை பிடித்து விட்டது என்பதும் அதேபோல் இரண்டு மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்து விட்டது என்பது முன்னணி நிலவரங்களில் இருந்து தெரிய வருகிறது. 
 
தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 66 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருப்பதால் அந்த கட்சி கிட்டதட்ட ஆட்சியை பிடித்து விட்டது. இம்மாநிலத்தில் 60 தொகுதிகள் இருந்தாலே ஆட்சியை நடத்தி விடலாம்
 
அதேபோல் சட்டீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 55 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. எனவே சத்தீஸ்கர் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
காங்கிரஸ் ஆட்சி செய்த ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக 102 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதால் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மத்திய பிரதேசத்தில்  பாஜக அமோகமாக முன்னிலை பெற்று வருகிறது. இம்மாநிலத்தில் பாஜக 100 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் காங்கிரஸ் 87 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva