வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (08:07 IST)

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் திடீர் ரஷ்யா பயணம்

சமீபத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் ரஷ்யா பயணம் சென்ற நிலையில் தற்போது திடீரென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களும் ரஷ்யா பயணம் செல்ல உள்ளதாக வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் நான்கு நாட்கள் பயணமாக ரஷ்யா செல்ல உள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ரஷ்யா செல்லும் வழியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் செல்லவும் வாய்ப்பு இருப்பதாகவும் ஈரான் தலைவர்களுடன் அவர் சந்திப்பு நடத்தி முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் சமீபத்தில் ரஷ்யா சென்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் சீன பாதுகாப்பு அமைச்சர் உள்பட பல்வேறு தலைவர்களிடம் ஆலோசனை நடத்திய அவர் இந்தியா திரும்பும் வழியில் ஈரான் சென்று அந்நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்
 
பாதுகாப்பு துறை அமைச்சர் ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள நிலையில் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா பயணம் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது