1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (15:55 IST)

‘த்ரிஷ்யம்’ படம் பார்த்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சகோதரர்கள்!

murder3
‘த்ரிஷ்யம்’ படம் பார்த்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சகோதரர்கள்!
‘த்ரிஷ்யம்’ படத்தில் நாயகன் மோகன்லால் ஒரு கொலையை செய்துவிட்டு அந்த கொலையை கடைசிவரை காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியாத வகையில் ஆதாரங்களை அழிந்திருப்பார். அந்த வகையில் சகோதரர்கள் இருவர் தங்கள் தந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
புனேவில் திருமணத்தை மீறிய உறவு கொண்ட தந்தையை கொலை செய்ய திட்டமிட்ட சகோதரர்கள் அவரை கொலை செய்து விட்டு உடலை எரித்து விட்டனர். அதன் பின்னர் விசாரணையை திசை திருப்புவதற்காக தந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
 
இதனையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்தபோது சகோதரர்கள் இருவரும் தான் கொலை செய்தது அம்பலமானது. அவர்களை கைது செய்து காவல் துறையினர் விசாரணை செய்தபோது ‘த்ரிஷ்யம்’ படத்தை பார்த்து கொலை செய்துவிட்டு ஆதாரங்களை அழித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva