திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2025 (14:45 IST)

ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகலையா சார்? கிரிக்கெட் பார்க்க சென்ற நாராயணமூர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Infosys Narayanamoorthi

நேற்று மும்பையில் நடந்த இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டியை காண இன்போசிஸ் நாராயணமூர்த்தி சென்றிருந்த நிலையில் அவரை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

இந்தியாவின் பிரபலமான ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நாராயணமூர்த்தி. சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் பேசியபோது, தொழிலாளர்களை ஞாயிற்றுக்கிழமையும் வேலைபார்க்க வைக்க முடியவில்லையே என தான் வருந்துவதாகவும், வாரம் 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டுமென்றும் அவர் பேசியது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் நேற்று மும்பையில் நடந்த இந்தியா - இங்கிலாந்து டி20 தொடரின் இறுதிப்போட்டியை நாராயணமூர்த்தி, தனது மருமகனும், இங்கிலாந்து முன்னாள் பிரதமருமான ரிஷி சுனக் உள்ளிட்டோருடன் கண்டு களித்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. 

 

இந்நிலையில் அதுகுறித்து பதிவிட்டு வரும் பலரும் ‘என்ன சார் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகலையா?’ என கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K