காங்கிரஸ் - மஜதவினரிடையே முற்றும் மோதல்: காங்கிரஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தேவகவுடா
குமாரசாமி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது எனக் கூறிய கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவிற்கு தேவே கவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குமாரசாமி ஆட்சி ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்காது என்றும் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நிலைமை மாறும் என்று சித்தராமையா தனது ஆதரவாளர்களிடம் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சித்தராமையாவின் இந்த கருத்துக்கு குமாரசாமி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து டெல்லியில் பேசிய தேவேகவுடா, ஜனதா தளத்தை காங்கிரஸ் குறைத்து மதிப்பிடக்கூடாது. தேர்தல் வெற்றிக்கு மஜத மிகப்பெரிய காரணம். எனவே காங்கிரஸ் மஜதவிற்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் என கூறினார்.