ஆக்சிஸ் பேங்க் அரசியலுக்கு எண்ட் கார்ட் போட்ட உத்தவ் தாக்கரே!
காவல் துறையிபரின் சம்பள கணக்கை தேசிய வங்கி ஒன்றுக்கு மாற்ற உத்தவ் தாக்கரே அரசு முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடும் குழப்பங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பின்னர் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. தற்போது முதல்வராக உள்ள உத்தவ் தாக்கரே தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
ஆம், மகாராஷ்டிர காவல் துறையினரின் சம்பள கணக்கை தேசிய வங்கி ஒன்றுக்கு மாற்ற உத்தவ் தாக்கரே அரசு முடிவு செய்துள்ளது உத்தவ் தாக்கரே அரசு.
இதற்கு முன்னர் மகாராஷ்டிர காவல் துறையில் பணியாற்றும் சுமார் 2 லட்சம் பேரின் சம்பள கணக்குகள் ஆக்சிஸ் வங்கியால் கையாளப்பட்டது. இந்த வகையில் ஆண்டு தோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசுப் பணத்தை ஆக்ஸிஸ் வங்கி கையாண்டது.
ஆக்சிஸ் வங்கியின் உயர் பதவியில், முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்நவிசின் மனைவி அம்ருதா இருப்பதால், முக்கியமான கணக்கை அங்கிருந்து மாற்ற உத்தவ் தாக்கரேவின் மகாராஷ்டிர அரசு தீர்மானித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.