புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : சனி, 2 நவம்பர் 2019 (20:22 IST)

விரலைக் கீறி ரத்தத்தில் எழுதிய குழந்தைகள் ..ஆட்சியருக்கு நோட்டீஸ்!

கேரளாவில் உள்ள  ,கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் குழந்தைகள் தங்கள் ரத்தத்தால் எழுதியது குறித்து அறிக்கை அனுப்புமாறு மாநில  குழந்தைகள் நல உரிமை ஆணையம் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில், ஆர்த்தோடக்ஸ் என்ற கிருஸ்தவ பிரிவினர் தேவாலயங்களை நிர்வகிக்க வேண்டுமென்ற கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஐகோபைட் என்ற கிருஸ்தவ பிரிவினர் சிலநாட்களாக போராடி வருகின்றனர்.
 
அந்த போராட்டத்தின் போது, குழந்தைகளும்  திரளாக கலந்துகொண்டனர். அப்போது சில குழந்தைகள் தங்கள் கை விர்அலைக் கீறி அதில் வழிந்த ரத்தத்தில் சத்தியம் என எழுதியதாகத் தெரிகிறது. ஐகோபைட் பிரிவினருக்கு ஆதரவளிக்கும் வண்ணம் குழந்தைகள் செயல்பட்டதாக இந்த செய்திகள் தினசரிகளில் வெளியாகி பரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி குழந்தைகள் உரிமைகள் ஆணையம் அம்மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உயரதிகார்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தகல்கள் வெளியாகி உள்ளன.