திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (10:00 IST)

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Stalin- jo biden
டெல்லியில்    ஜி 20 உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில் இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பட  பல உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் 

நேற்று தலைநகர் டெல்லியில் தொடங்கிய ஜி 20  மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த உலகத் தலைவர்கள் இன்று காலையில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு வந்து மரியாதை செய்தனர். உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி சால்வை அணிந்து வரவேற்றார். ராஜ்காட்டில் உள்ள அமைதியின் சுவற்றில் கையெழுத்திட்டனர்.

இதன் முதல் நாளான நேற்று உலக  தலைவர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்து அளித்தார்.  இதில், முன்னாள் பிரதமர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் அளித்த விருந்தில் பங்கேற்ற முதல்வர்  மு.க.ஸ்டாலின் பைடனை சந்தித்துள்ளார்.

அதாவது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அதிபர் ஜோ பைடனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி.. அப்போது, அமெரிக்க அதிபருடன் கைகுலுக்கினர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.