மைசூர்-சென்னை வந்தே பாரத் ரயிலிலும் மோதிய மாடு: ரயிலுக்கு சேதமா?
மைசூர்-சென்னை வந்தே பாரத் ரயிலிலும் மோதிய மாடு: ரயிலுக்கு சேதமா?
ஏற்கனவே வந்தே பாரத்ரயில்கள் மூன்று முறை மாடு மீது மோதி சேதம் ஆகிய நிலையில் தற்போது நான்காவது முறையாகவும் மாடு மீது வந்தே பாரத் ரயில் மோதியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
சமீபத்தில் சென்னையில் இருந்து மைசூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது என்பதும் இந்த ரயிலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்று இரவு மைசூரில் இருந்து கிளம்பி சென்னை நோக்கி வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தபோது அரக்கோணம் சந்திப்பு அருகே திடீரென கன்றுக்குட்டி மீது மோதியதாக தெரிகிறது
இதன் காரணமாக ரயிலின் முன் பக்கம் லேசான சேதம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ச்சியாக வந்தே பாரத் ரயில்கள் மாடு மீது மோதிக்கொண்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது
Edited by Mahendran