1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (17:34 IST)

மத்திய அரசின் 2019 பட்ஜெட் - ஒரு அலசல்...

ஒட்டுமொத்த பாரதநாடு மக்களும் எதிர்பார்த்த மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் பொறுப்பு வகிக்கும்  பியூஸ் கோயல் இன்று  தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் பற்றி  இன்று காலை முதல் பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த பட்ஜெட்டில் முக்கியமாக நடுத்தர வர்க்கத்தினர் நலனுக்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் 2 ஹெக்டேர் நிலத்திற்கு குறைவாக உள்ள விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்றும் இதனால் 12 கோடி பேர் பயன் பெறுவார்கள்.
 
அமைப்பு சாரா தொழிலாளார்களுக்கு மெகா பென்ஷன் திட்டத்தில் 60 வயதான பிறகு ரூ.3000 பென்ஷன் வழங்கப்படும்.
 
தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
ஆனால் இந்த பட்ஜெட்டால் பல எதிர்மறைவான நிகழ்வுகளும் உள்ளது. குறிப்பாக ஏற்கனவே பல லட்சம் கோடி கடன் வைத்துள்ள நம் நாட்டில் இத்தனை கோடி தொகையை எங்கிருந்து திரட்ட போகிறது என்ற கேள்வி எழுகிறது.

மேலும் நிதிப்பற்றாக்குறை 6 % லிருந்து 3 % மாக குறைக்கப்பட்டதாக பியூஸ் கோப அறிவித்தார். இதனால் பட்ஜெட்டில் அறிவித்துள்ள திட்டங்களுக்கு அதிக நிதிப்பற்றாக்குறை ஏற்படும் என்ற பேச்சும் விமர்சனமும் எழுகின்றன.