செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2023 (13:04 IST)

சாதிய ஒடுக்குமுறைகளை ஒழிக்க வேண்டும்- ஆர்.எஸ்.எஸ்

dattatreya hosabale
இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எந்தக் கோயிலுக்கு உள்ளேயும் நுழையலாம் சாதிய ஒடுக்குமுறைகளை ஒழிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவில்  ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா  ஹொசபலே பேசியதாவது: ''இந்தியாவில் யார் வேண்டுமானாலும், எந்தக் கோயிலுக்கு உள்ளேயும் நுழையலாம் திண்டாமையின் பெயரால் சாதிக பாகுபாடுகளை நாம் சகித்துக் கொள்ளக் கூடாது, சாதி ஒடுக்குமுறைகளை நாம் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  ''விளையாட்டுப் போட்டிகளில் இந்தியர்கள் சாதிக்கிறார்கள். அவர்களிடம் என்ன சாதி என கேட்பதில்லை. சந்திரயான் 3 விண்வெளியில் வெற்றிகரமாக பாய்ந்தது. அந்த விஞ்ஞானிகளின் சாதியையா  நாம் பார்த்தோமா? இந்துக்களை பற்றி பேசுவதாலேயே ஆர்.எஸ்.எஸ் மதவாத இயக்கம் என்கிறார்கள்….சனாதன தர்மம் சடங்குகளை பற்றியது அல்ல. அது வழிபாட்டு முறைகளைப் பற்றியது'' என்று தெரிவித்துள்ளார்.