1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 22 மார்ச் 2017 (18:47 IST)

காரை கடலில் இறக்கி சாகசம்; குடும்பத்துடன் சிக்கிய தொழிலதிபர்

மும்பையில் தொழிலதிபர் ஒருவர் கடற்கரையில் காரை ஓட்டி சாகசம் செய்தபோது குடும்பத்துடன் கார் கடலில் சிக்கிக்கொண்டது. 


 

 
மும்பையை சேர்ந்த அரவிந்த என்பவர் தனது குடும்பத்தினருடன் பால்கர் பகுதியில் உள்ள போர்டி கடற்கரைக்கு காரில் சென்றிருந்தார். அவர் காரை கடற்கரையில் ஓட்டி சென்றார். ஒரு த்ரில் அனுபவத்திற்காக காரை கடல் அலை வரும் பகுதியில் ஓட்டியுள்ளார். 
 
அப்போது கார் எதிர்பாராத விதமாக சகதியில் சிக்கிக் கொண்டது. இதனால் கடல் அலையில் கார் உள்ளே இழுக்கப்பட்டது. கார் உள்ளே இருந்தவர் அதிர்ச்சியில் உறைந்தனர். கார் கதவும் திறக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். கடற்கரையில் இருந்தவர் உடனே வந்து காரில் இருந்தவர்களை காப்பாற்றியுள்ளனர்.
 
ஆனால் காரை மீட்க முடியவில்லை. பின்னர் மறுநாள் அந்த கார் சங்கிலியில் பிணைக்கப்பட்டு கிரேன் மூலம் வெளியே இழுக்கப்பட்டது.