திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 22 நவம்பர் 2017 (13:38 IST)

மெர்சல் மாயோன் ஸ்டைலில் மோடி: குஜராத்தில் மேஜிக் பிரசாரம்!!

மெர்சல் படத்தில் வந்த மாயோன் என்ற மேஜிக் மேன் கதாபத்திரம் போன்று குஜராத தேர்தலில் மேஜிக் பிரசாரம் செய்ய உள்ளதாம் பாஜக.

 
குஜராத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இன்னும் பிரசார களத்தில் இறங்காத மோடியை, திணறடிக்கும் வைகையில் பாஜவினர் பிரசார திட்டங்களை தீட்டி வருகின்றனர். ஆம், மேஜிக் கலைஞர்களை வைத்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனராம்.
 
குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளிலும் இந்த மேஜிக் கலைஞர்களை வைத்து தனது திட்டங்களை பிரசாரம் செய்யவுள்ளது குஜராத் பாஜக அரடு. மேஜிக் செய்வதோடு நிறுத்திக்கொளாமல், பாஜகவின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்தும் வித்தியாசமாக முறையில் அறிவிக்கவுள்ளனராம்.
 
இன்று முதல் 182 தொகுதிகளிலும் இந்த மேஜிக் பிரசாரம் துவங்கவுள்ளது. தெரு நாடகம், நடனம், 3டி பிரசாரம் என பாஜகவினர் வித விதமான பிரசார யுக்திகளை கையாண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
ஆனால் காங்கிரஸ் கட்சியோ, பாஜக ஒரு மாயக்காரர்கள் நிறைந்த கட்சி. அதைத்தான் இந்த மேஜிக் பிரசாரம் நிரூபிக்க போகிறது என கேலி செய்துள்ளனர்.