செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (07:40 IST)

மனைவியுடன் தொழிலதிபர் தற்கொலை.. அமலாக்கத்துறை கொடுத்த நெருக்கடி காரணமா?

பிரபல தொழிலதிபர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, இந்த தற்கொலைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் நெருக்கடிதான் காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் பார்மர் என்ற தொழிலதிபர் நேற்று முன்தினம் தனது மனைவி நேஹாவுடன் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலைக்கான காரணம் குறித்து மனோஜ் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு எழுதிய அந்த கடிதத்தில், அமலாக்கத்துறை மற்றும் பாஜக நிர்வாகிகள் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளை கவனித்துக் கொள்ளுமாறு ராகுல் காந்திக்கு அவர் அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கடிதம் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தொழிலதிபர் மனோஜ் பார்மர் குடும்பத்தாரிடம் விசாரித்த பின் உண்மை தன்மை குறித்து தெரியவரும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தற்கொலை அல்ல, மத்திய பிரதேசம் மாநில அரசாங்கம் நிகழ்த்தப்பட்ட கொலை; பாஜக நிர்வாகிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளே அவரது தற்கொலைக்கு காரணம் என்று காங்கிரஸ் தலைவர்  ஜிது பட்வாரி கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் மக்களுக்கான கட்சி என்பதால் தான், அவர் தனது கடிதத்தில் தன்னுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்ளும்படி ராகுல் காந்திக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை இது குறித்து விளக்கம் அளித்த போது, பிரதமர் வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் முதல்வரின் இளைஞர் கலன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தற்கொலை செய்து கொண்ட மனோஜ் ஆறு கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும், ஆனால் தொழில் தொடங்காமல் அந்த பணத்தை தன்னுடைய குழந்தைகள் பெயரில் சொத்து வாங்கியதால் அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Edited by Siva