வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2016 (07:41 IST)

’ஆச்சரியம்’ - அரசியலில் நுழைந்தார் பிரபல கிரிக்கெட் வீரர்!

உத்தரப் பிரதேசம் மீரட்டைசேர்ந்தவர், இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீண் குமார். இவர் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்.


 
 
2017 ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவர் சமாஜவாதி கட்சியில் சேர்ந்துள்ளார். 


 
 
முதல்வர் அகிலேஷ் யாதவை அவர் சந்தித்துப் பேசிய பிறகு, அவர் பத்திரிகையாளர்களிடன் கூறியதாவது, “விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் ஏராளமான நன்மைகளைச் செய்துள்ளார். மேலும், மாநில வளர்ச்சிக்கு முதல்வர் நிறைய பணிகளை செய்துள்ளார். நான் முதல்வரைச் சந்தித்து, சமாஜவாதி கட்சியில் இணைந்து விட்டேன். கட்சிக்கு என்னால் இயன்றதைச் செய்வேன். 
 
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியீடுவீர்களா? என்று கேட்கிறீர்கள். அரசியலுக்கு நான் சிறு பிள்ளை போன்றவன். தற்போது அரசியலைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முயலுவேன்.”