வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 டிசம்பர் 2019 (16:40 IST)

ஓயாத எதிர்ப்பு: முடிவு கட்ட காய் நகர்த்திய பாஜக தலைமை!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இன்னும் எதிர்ப்புகள் ஓயாத காரணத்தால் இதனை முடிவுக்கு கொண்டுவர பாஜக தலைமை ஒரு முடிவெடுத்துள்ளதாம். 
 
மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தேசிய அளவில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அரசு தங்கள் நிலைபாடு குறித்து விளக்கம் அளித்துள்ள போதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. பல இடங்களில் போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டதால் போலீஸ் கெடுபிடி அதிகரித்துள்ளது.
 
எனவே இதை சமாளிக்க மக்களிடம் உண்மையை நிலைநாட்டும் வகையிலான பிரச்சாரத்தை முன்னெடுக்க, தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது.
 
இதன் மூலம் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் உண்மை பக்கங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய பொருப்பு கட்சி நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்களிடையே ஒப்படைக்கப்பட்டுள்ளது.