1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூன் 2020 (17:37 IST)

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவசமாக காண்டம் கொடுத்த பீகார் அரசு

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்ததே 
 
அந்த வகையில் பீகார் மாநிலத்திற்கு சுமார் 28 முதல் 29 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சொந்த மாநிலத்துக்கு திரும்பிய தொழிலாளர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் பீகார் அரசு, அவர்கள் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்த பிறகு வீட்டிற்குச் செல்லும்போது இலவசமாக காண்டம்களை கொடுத்து அனுப்பி உள்ளது
 
துவரை சுமார் 8 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்து விட்டு தங்களுடைய வீட்டிற்கு சென்று உள்ளதாகவும் அவர்கள் அனைவருக்கும் காண்டம்கள் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் பீகார் அரசு தெரிவித்துள்ளது
 
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் சொந்த வீட்டிற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் செல்வதால் தேவையில்லாத கர்ப்பத்தை தடுக்கவே காண்டம்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக பிகார் அரசு விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது