முன்னாள் முதல்வர் மகனுக்குக் ரூ.4000 அபராதம்: போக்குவரத்து காவல்துறை அதிரடி..!
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகனுக்கு போக்குவரத்து காவல்துறை 4000 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், இவர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஹோலி கொண்டாடிய பின்னர், இருசக்கர வாகனத்தில் அவர் பயணம் மேற்கொண்டார். ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததை அடுத்து, போக்குவரத்து காவல்துறை அவரை தடுத்து நிறுத்தி 4000 ரூபாய் அபராதம் விதித்தது.
மேலும், அவர் பயணம் செய்த இருசக்கர வாகனத்தின் இன்சூரன்ஸ் மற்றும் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் காலாவதி ஆகியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, போக்குவரத்து காவல்துறை அதிகாரி அவருக்கு அபராதம் விதித்து, இது போன்ற வாகனத்தை இயக்கக்கூடாது என்றும், ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva