திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 27 மே 2018 (10:48 IST)

‘நிபா’ வைரஸ் பரவ வவ்வால்கள் காரணம் அல்ல - ஆய்வின் தகவல்

நிபா வைரஸ் பரவ வவ்வால்கள் காரணம் அல்ல என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. 
 
இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின் உடல்களில் உள்ள அனைத்து செய்ல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது.
 
இந்த நிபா வைரஸ் தாக்கி கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
‘நிபா’ வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவுவதாக கூறப்படுவதால் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் வவ்வால்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவை மத்தியபிரதேச மாநிலம் போபால் மற்றும் மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள தேசிய ஆய்வுக்கூடங்களில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
ஆய்வின் முடிவில்  ‘நிபா’ வைரஸ் பரவலுக்கு காரணம் வவ்வால்கள் அல்ல என்று தெரிய வந்துள்ளது. நிபா வைரஸ் பரவுவதற்கான காரணம் குறித்து கண்டறிய மத்திய சுகாதாரத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.