வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 ஜனவரி 2018 (05:32 IST)

பிறமத ஆண்களுடன் நட்பு கூடாது: இந்து மாணவிகளுக்கு பஜ்ரங்தள் எச்சரிக்கை

இந்து அல்லாத பிற மதங்களை சேர்ந்த ஆண்களுடன் நட்பு வைக்க கூடாது என கர்நாடகத்தில் உள்ள இந்துமத மாணவிகளுக்கு பஜ்ரங்தள் அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து பஜ்ரங்தள் அமைப்பின் சார்பில் நேற்று வெளியான ஒரு அறிக்கையில் 'இந்துத்துவாவை காக்க வேண்டியது பஜ்ரங்தள் அமைப்பின் கடமையாகும், இந்து அல்லாத வாலிபர்களுடன் சுற்றும் மானவிகள் அனைவரும் கடும் இழப்பை எதிர்க்கொள்ள வேண்டியது இருக்கும்' என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த எச்சரிக்கை அறிக்கைக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நட்பு என்பது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றுக்குள் அடங்காது என்றும் மதத்தின் பெயரில் முன்னெடுக்கப்படும் இச்செயலுக்கு கடும் நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியபோது இந்த அறிக்கையை வெளியிட்ட அமைப்பின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளது. ஆனால் தங்களுடைய நடவடிக்கையை பஜ்ரங்தள் அமைப்பு நியாயப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.