1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (14:28 IST)

ஆந்திராவை நெருங்கியது அசானி புயல்: இன்று நள்ளிரவில் கரையை கடக்கும் என தகவல்

cyclone
வங்கக்கடலில் அந்தமான் தீவு அருகே ஏற்பட்ட அசானி புயல் தற்போது கரையை நெருங்கி வருவதாகவும் இன்று இரவு ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கு இடையே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது
 
வங்கக் கடலில் உருவான  அசானி புயல் காரணமாக தமிழகம் ஆந்திரா ஒரிசா ஆகிய மாநிலங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது
 
 இந்த நிலையில் அசானி புயல் ஆந்திராவை நெருங்கி விட்டது என்றும் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்றும் இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார் 
 
புயல் கரையை கடக்கும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலத்தில் செய்து கொள்ள வேண்டுமென ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது