புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (09:22 IST)

தலீபான்னா ரெம்ப பிடிக்குமோ? – ஆதரவு பதிவிட்ட ஆந்திரா ஆசாமி கைது!

ஆந்திராவில் தலீபான்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இன்னமும் தலீபான்களை பயங்கரவாதிகள் பட்டியலில் வைத்துள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பேசுபவர்கள் மீது பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த ஆசிப் ஹல்ஹலி என்பவர் “நான் தலீபான்களை விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். மேலும் பல பதிவுகளில் தலீபான்கள் ஆதரவு கமெண்ட் இட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.